சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு சென்றுள்ள சுவிஸ் விமானம்... விமானத்தில் அனுப்பப்பட்டுள்ள பொருட்களின் விவரம்
இலங்கைக்கு சுவிட்சர்லாந்து மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளதாக சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுவிட்சர்லாந்து அனுப்பியுள்ள பொருட்களில் அரை மில்லியன் கொரோனா ஆன்டிஜன் சோதனை கிட்கள், 50 வென்டிலேட்டர்கள், 150 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள், மற்றும், 3.5 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான பரிசோதனை உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
நேற்று, திங்கட்கிழமை, 16 டன் மருத்துவ உபகரணங்களுடன் சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாக சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.