மோசமடைந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் போராடி வரும் பிரபல நாட்டிற்கு சுவிஸ் செய்த பேருதவி
கொரோனாவால் மிகவும் மோசமடைந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் சர்வதேச நாடுகளிடம் உதவி கோரிய நேபாளத்திற்கு சுவிஸ் 5.6 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சுகாதார சாதனங்களை அனுப்பி பேருதவி செய்துள்ளது.
அதிகரித்து வரும் தொற்று வீதத்தைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கிட்டத்தட்ட 5,00,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன, மேலும் 6,024 பேர் இறந்துள்ளனர்.
இந்த மாதம் நிலைமை கடுமையாக மோசமடைந்ததையடுத்து நேபாளம் சர்வதேச சமூகத்தின் உதவியைக் கோரியது.
மோசமான சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவமனை படுக்கைகள், நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையுடன் போராடி வரும் நேபாளத்திற்கு உதவ சுவிஸ் அரசு 5.6 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது.
இந்த உதவி நேபாள சுகாதார அமைச்சர் Hridayesh Tripathi-யிடம் காத்மாண்டு விமான நிலையத்தில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில் 40 வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் concentrators, 1.1 மில்லியன் கொரோனா சோதனை கருவிகள், முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன என்று நேபாள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.