சுவிஸில் 4 புதிய மருந்துகள் தயாரிக்க திட்டம்: 30 மில்லியன் டொலர் மதிப்பில் ஒப்பந்தம்
சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய மருந்துகளைத் தயாரிக்க உள்நாட்டைச் சார்ந்த 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மருந்துகள் 2022-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது சுகாதாரத்திற்கான பெடரல் அலுவலகம் (FOPH) மற்றும் சுவிஸ் இன்னோவேஷன் ஏஜென்சி இன்னோசுயிஸ்ஸால் (Innosuisse) நடத்தப்படும் கோவிட்-19 மருந்துகளுக்கான ஃபெடரல் நிதித் திட்டத்தின் பின்னணியில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்று அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது.
இந்த 4 ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு CHF27 மில்லியன் ($29.2 மில்லியன்) ஆகும்.
கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் அறிகுறிகளின் வரம்பிற்கு சிகிச்சையளிப்பதையும் நோயின் நீளம் மற்றும் தீவிரத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த புதிய மருந்துகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 4 மருந்துகளில் இரண்டு மருந்துகள் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகளுக்கானவை (monoclonal antibody treatments) என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்று, கோவிட் நோயால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர்களின் நரம்பியல் மனநல அறிகுறிகளுக்கானது, மற்றொன்று கோவிட் -19 பாதிப்பு காரணமாக கடுமையான போக்கின் ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது திட்டம் - வாய்வழி நுரையீரல் வாசோடைலேட்டர் (oral pulmonary vasodilator) மருந்து ஆகும். இது சுவாச செயலிழப்பைத் தடுக்கும் மற்றும் செயற்கை காற்றோட்டத்தின் தேவையைக் குறைக்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
நான்காவது திட்டம்: "கோவிட்-19ன் அனைத்து தீவிரங்களுக்கும்" சிகிச்சையளிப்பதற்கான ஒரு வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்தை தயாரிப்பதாகும்.