சுவிஸ் இளம்பெண் படுகொலை... 350 கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார்
இந்தியர் ஒருவர் சுவிஸ் இளம்பெண் ஒருவரை ஆசை காட்டி இந்தியாவுக்கு வரவழைத்து படுகொலை செய்த வழக்கில், பொலிசார் 350 CCTV கமெராக்களை ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார்கள்.
சுவிஸ் இளம்பெண் படுகொலை
இந்தியாவின் டெல்லியிலுள்ள திலக் நகர் என்னுமிடத்தில் வெளிநாட்டவரான அழகிய இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், அவரது பெயர் நினா பெர்கெர் (Nina Berger, 30) என்பதும், அவர் சுவிஸ் நாட்டவர் என்பதும் தெரியவந்தது.
அவரை குர்பிரீத் சிங் என்னும் இந்தியர் இந்தியாவுக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
குர்பிரீத் சிங் சிக்கியது எப்படி?
குர்பிரீத் சிங், நினாவை கொல்வதற்கு முன், அவரை டெல்லியிலுள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின், நினாவின் உயிரற்ற உடல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கை கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, பிளாஸ்டிக் கவர் ஒன்றிற்குள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
The Indian Express
ஆக, பொலிசார் குர்பிரீத் சிங் நினாவைக் கொல்வதற்கு முன் அவரை அழைத்துச் சென்ற இடங்கள், அவரது உடல் கிடைத்த இடம் முதலான பல்வேறு இடங்களிலுள்ள CCTV கமெராக்களை ஆய்வு செய்துள்ளார்கள்.
அவ்வகையில், நினா கொலைக்கும் குர்பிரீத்துக்கும் இடையிலான தொடர்பை உறுதி செய்ய, 350 CCTV கமெராக்களை ஆய்வு செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Mathrubhumi
விடயம் என்னவென்றால், குர்பிரீத் நினாவைக் கொலை செய்ததற்கான காரணம் இன்னமும் உறுதியாகத் தெரியவரவில்லை.
பொலிசார் தொடர்ந்து குர்பிரீத்தை விசாரித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |