சுவிஸ் இளம்பெண் கொலை வழக்கு: குற்றவாளியை இந்திய பொலிசார் பிடித்தது எப்படி? விவரம் செய்திக்குள்...
சுவிஸ் இளம்பெண் ஒருவர், இந்தியர் ஒருவரால் இந்தியாவில் கொல்லப்பட்ட வழக்கை, இந்திய பொலிசார் வெற்றிகரமாக முடித்துவைத்துள்ளார்கள்.
ஆனால், அவர்கள் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
இந்தியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட சுவிஸ் இளம்பெண்
சுவிட்சர்லாந்தின் சூரிச்சைச் சேர்ந்த இளம்பெண்ணான நினா பெர்கர் (Nina Berger, 30), ஒரு சட்டத்தரணி ஆவார். அவரைக் கொலை செய்ததாக, குர்பிரீத் சிங் (Gurpreet Singh, 33) என்பவரை இந்திய பொலிசார் கைது செய்தார்கள்.
www.newindian.in
தன்னைக் காதலித்து, திருமணம் செய்ய மறுத்ததால் அவரைக் கொலை செய்ததாக குர்பிரீத் பொலிசாரிடம் கூறியிருந்தார். ஆனால், அது உண்மை இல்லை, நினா குர்பிரீத்திடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால்தான் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
காருக்குள் கிடைத்த துகள்கள் முதல் பாலியல் விடுதி வரை
குர்பிரீத், நினா கொலைக்கு முன் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்தக் கார், ஒரு பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. பொலிசார் அந்தப் பெண்ணைத் தேடிச் சென்றபோது, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், குர்பிரீத் அடிக்கடி அவரிடம் செல்வதுண்டு என்றும், அப்படி ஒருமுறை வந்தபோது, அந்தப் பெண்ணின் அடையாள அட்டையை அவர் திருடிச் சென்றுவிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார். ஆக, குர்பிரீத் நீண்ட நாட்களாக திட்டமிட்டே நினாவை கொலை செய்தது உறுதியானது.
சர்ப்ரைஸ் ட்ரைவ் போகலாம் என ஆசை காட்டிய குற்றவாளி
ஒரு சர்ப்ரைஸ் ட்ரைவ் போகலாம் என ஆசை காட்டி நினாவை காரில் அழைத்துச் சென்ற குர்பிரீத், அவரை காருக்குள் வைத்தே கொலை செய்திருக்கிறார். ஒரு நாள் முழுவதும் நினாவின் உடல் காருக்குள்ளேயே இருக்க, நாற்றம் வீசத் துவங்கியதால், நினாவின் உடலை பள்ளி ஒன்றின் பின்னால் வீசிவிட்டு, சற்று தள்ளி காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் குர்பிரீத்.
அப்போதுதான் அந்தக் கார் பொலிசார் கண்களில் பட்டுள்ளது.
10ஆம் வகுப்பைக் கூட தாண்டாத கோடீஸ்வரர்
குர்பிரீத் 10ஆம் வகுப்பைக் கூட முடிக்கவில்லை. ஆனால், அவரது வங்கிக்கணக்கில் சுமார் 2 கோடி ரூபாய் உள்ளது. அவரது வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, அங்கும் அவர் 2 கோடி ரூபாய் ரொக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது.
10ஆம் வகுப்பைக் கூட தாண்டாத குர்பிரீத்துக்கு இவ்வளவு பணம் ஏது என பொலிசார் விசாரிக்கும்போது, அவரது தந்தையான அர்ஜூன் சிங் ரத்தினக்கற்கள் வியாபாரம், ஜோதிடம் மற்றும் பரிகார பூஜைகள் செய்பவர் என்பதும் அவரிடம் தொழில் கற்ற குர்பிரீத், தந்தையைப் போலவே பல முறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. அப்படி சுவிட்சர்லாந்துக்குச் செல்லும்போதுதான் அவரது வலையில் நினா சிக்கியுள்ளார்.
கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிய இளம்பெண்
குர்பிரீத்திடம் நினா சுமார் 8 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதைத் திருப்பிக் கொடுக்குமாறு குர்பிரீத் நினாவை வற்புறுத்த, டெல்லியிலுள்ள ஏடிம்களுக்குச் சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார் நினா. மேலும், வங்கி ஒன்றில் சென்று பணம் எடுக்க முயன்றும் நினாவால் முடியாததால் சலிப்படைந்த குர்பிரீத், காருக்குள் வைத்து சங்கிலியால் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.
காரில் கிடைத்த நினாவின் தலைமுடி, கார் இருக்கையின் துகள்கள், இரத்தக்கரை ஆகியவை, நினா காருக்குள் உயிருக்குப் போராடியதற்கு ஆதாரமாக உள்ளன. கைவிடப்பட்ட கார், காரிலிருந்து பாலியல் விடுதி, பாலியல் தொழிலாளியிடமிருந்து அடையாள அட்டையைத் திருடிய நபர் என படிப்படியாக விசாரித்த பொலிசாரிடம் குர்பிரீத் வசமாக சிக்கிக்கொண்டார். இந்நிலையில், சுவிட்சர்லாந்துக்கே சென்று நினாவின் பெற்றோரை மிரட்டிய குர்பிரீத்தின் தந்தை அர்ஜூன் சிங்கையும் பொலிசார் வலைவீசித் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |