சுவிஸ் தங்க ஏற்றுமதியாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிலவகை தங்கக்கட்டிகளுக்கு அந்நாடு சுங்க வரி விதிக்க இருப்பதாக வெளியான தகவல் சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளின் ஏற்றுமதியாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
ஒரு நல்ல செய்தி
சமீபத்தில், அமெரிக்கா இறக்குமதி செய்யும் 1 கிலோ மற்றும் 100 அவுன்ஸ் அளவிலான தங்கக் கட்டிகளுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக பிரபல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, ஏற்றுமதியாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தின.
இந்நிலையில், அது தவறான தகவல் என Bloomberg ஊடகம் தற்போது தெரிவித்துள்ளது.
ஆக, இறக்குமதி செய்யப்படும் சில வகை தங்கக்கட்டிகள் மீது அமெரிக்க சுங்க வரி விதிக்க இருப்பதாக வெளியான தவறான தகவலுக்கு விளக்கமளிக்கும் வகையில், வெள்ளை மாளிகை நிர்வாக ஆணை ஒன்றை வெளியிட இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆக, அமெரிக்கா இறக்குமதி செய்யும் 1 கிலோ மற்றும் 100 அவுன்ஸ் அளவிலான தங்கக் கட்டிகளுக்கு சுங்க வரி விதிக்கப்படப்போவதில்லை என்னும் செய்தி, கவலையிலிருந்த சுவிஸ் தங்க ஏற்றுமதியாளர்களுக்கு ஆறுதலை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |