நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும்... சுவிட்சர்லாந்து அரசு எச்சரிக்கை
ரஷ்யா ஐரோப்பாவுக்கு வழங்கிவரும் எரிவாயுவின் அளவை வெகுவாகக் குறைத்துவிட்டது.
அதைத் தொடர்ந்து குளிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடு முழுவதும் கலவரங்கள் வெடிக்கலாம் என சுவிஸ் அரசு எச்சரித்துள்ளது.
ரஷ்யா ஐரோப்பாவுக்கு வழங்கிவரும் எரிவாயுவின் அளவை வெகுவாகக் குறைத்துவரும் நிலையில், கடுமையான குளிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் கலவரங்கள் வெடிக்கலாம் என சுவிஸ் அரசு எச்சரித்துள்ளது.
ரஷ்யா தனது Nord Stream 1 gas pipeline திட்டத்தின் மூலம் குழாய் வழியாக ஐரோப்பாவுக்கு அனுப்பிவரும் எரிவாயுவின் அளவை வெகுவாகக் குறைத்துவிட்டது.
அதனால் கலவரங்கள் போன்ற மோசமான விளைவுகளை வருங்காலத்தில் சந்திக்க நேரிடலாம் என சுவிஸ் அரசும் மாகாணங்களும் பொதுமக்களை எச்சரித்துள்ளன.
IMAGE: AP
மூத்த மாகாண பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உருவாகியுள்ள எரிபொருள் பிரச்சினை பயங்கர மோசமான பின்விளைவுகளை உருகாக்கும் என்று கூறியுள்ளார்.
அதேபோல், சுவிஸ் பொலிஸ் துறைத் தலைவரான Fredy Fassler கூறும்போதும், வரும் குளிர்காலத்தில் எரிபொருள் பிரச்சினை ஏற்படுமானால், நாடு முழுவதும் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.