மக்களை தடுப்பூசி பெற வைப்பதற்காக சுவிஸ் அரசு முன்வைத்த திட்டம்: ஒட்டுமொத்தமாக மாகாணங்கள் எடுத்துள்ள முடிவு
சுவிஸ் மக்களை தடுப்பூசி பெற வைப்பதற்காக பெடரல் அரசு முன்வைத்த திட்டம் ஒன்றை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளன அனைத்து சுவிஸ் மாகாணங்களும்.
அனைவரையும் கொரோனா தடுப்பூசி பெறவைக்கவேண்டும் என்பதற்காக பெடரல் அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தது. அதன்படி, தடுப்பூசி பெற தயங்குபவர்களை யார் தடுப்பூசி போட சம்மதிக்கவைக்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்படும்.
புதிதாக ஒருவரை சம்மதிக்கவைத்து, அவர் தடுப்பூசி பெற்றுக்கொள்வாரென்றால், அவரை தடுப்பூசி பெற சம்மதிக்க வைப்பவருக்கு 50 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டது.
இந்த திட்டம் அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைக்கச் செய்துவிட்டது. ஆனால், எதிர்மறையாக...
ஆம், அனைத்து சுவிஸ் மாகாணங்களும் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளன.
Thurgau மாகாணம் இது கேலி செய்யும் செயல் என்றும், St. Gallen, இது அர்த்தமற்ற செயல் என்றும், சூரிச், இப்படி பணம் கொடுப்பது தவறு என்றும், Neuchatel, இது நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.
எங்களிடம் தடுப்பூசி வழங்க போதுமான வசதிகள் உள்ளன, மக்கள் வந்தால் போதும் என்கின்றன அவை...