கடுமையான வெப்பம்... சுவிஸ் அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக, எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருக்கும் மக்களுக்காக, கடந்த மாதம் சில நடவடிக்கைகளை எடுத்தன சில சுவிஸ் மாகாணங்கள்.
இந்நிலையில், ஜெனீவா மாகாணம், மீண்டும் மக்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கியுள்ளது.
சுவிஸ் மாகாணங்கள் எடுத்த நடவடிக்கை
கடந்த மாதம், வெப்பம் காரணமாக எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருக்கும் மக்களை தொலைபேசி மூலம் விசாரிப்பது, அவர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என சோதிப்பது, முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது என பல நடவடிக்கைகளை Vaud மற்றும் ஜெனீவா மாகாணங்கள் துவக்கின.

மக்களுக்கு சில ஆலோசனைகள் அந்த திட்டங்கள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், ஜெனீவா மாகாணம், மக்களுக்கு மீண்டும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும், பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருக்கும் மக்கள் வீடுகளுக்குச் சென்று அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |