வீடுகள் தட்டுப்பாடு... பெரிய வீடுகளில் வாழும் முதியவர்கள்: தலையிட முடிவு செய்துள்ள அரசு
சுவிட்சர்லாந்தில் ஒரு பக்கம் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்னொரு பக்கமோ, பெரிய பெரிய வீடுகளில் ஒரு முதியவர் அல்லது முதிய தம்பதியர் தனியாக வாழ்கிறார்கள்.
ஆக, இந்த இரண்டு விடயங்களையும் நேர்த்தியாக கையாண்டு வீடுகள் தட்டுப்பாட்டைத் தீர்க்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.
பெரிய வீடுகளில் வாழும் முதியவர்கள்
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் பிறந்த தலைமுறையினர், பேபி பூமர் தலைமுறையினர் (baby boomer generation) என அழைக்கப்படுகிறார்கள்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இந்த பேபி பூமர் தலைமுறையினர், அதாவது, அந்த காலகட்டத்தைச் சேர்ந்த முதியவர்கள் ஏராளமானோர் பெரிய பெரிய வீடுகளில் தனியாக வாழ்ந்துவருகிறார்கள்.
அவ்வகையில், சுமார் 300,000 தனி வீடுகள் முதியவர்களால் பயன்படுத்தப்பட்டுவருவதாக ஃபெடரல் வீட்டு வசதி அலுவலகம் தெரிவிக்கிறது.
இன்னொரு பக்கமோ, வீடுகள் தட்டுப்பாடு காரணமாக பலருக்குவீடுகள் கிடைப்பதில் பிரச்சினை இருந்து வருகிறது.
ஆக, அப்படி பெரிய பெரிய வீடுகளில் தனியாக வாழும் முதியவர்களை, தங்கள் வீடுகளை விட்டு விட்டு, அவர்களுடைய வயதுக்கு ஏற்ற வீடுகளில் குடியேறச் செய்வது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அது குறித்து தேசிய அளவில் ஆய்வொன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டின் இறுதியில் அந்த ஆய்வின் முடிவுகள் வெளியாக உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |