சுவிஸ் பெண்ணுக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா: உடனடி நடவடிக்கை எடுத்த சுவிஸ் அரசு
சுவிஸ் நாட்டுப் பெண்ணொருவருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுவிஸ் அரசு அந்த விடயத்தில் தலையிடும் நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவின் கெடுபிடிகள்
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் வெளிநாட்டவர்களுக்கு பல இடையூறுகளை உருவாக்கி வருகிறது.
வெளிநாட்டவர்களையும் அவர்களுடைய லாப்டாப்கள், மொபைல்களையும் கடுமையாக சோதனைக்குட்படுத்துவது முதலான பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது அமெரிக்க அரசு.
சமீபத்தில், பிரான்ஸ் நாட்டு அறிவியலாளர் ஒருவருக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு அந்நாடு தடை விதித்தது.
இந்நிலையில், மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற சுவிஸ் பெண்ணொருவருக்கு அனுமதி மறுத்துள்ளது அமெரிக்க அரசு.
இதனால் பொறுமையிழந்த சுவிஸ் அரசு, உடனடியாக அந்த விடயத்தில் தலையிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தை தொடர்புகொண்ட சுவிஸ் அரசு, அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |