சொந்த நாட்டு மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை... சுவிஸ் அரசு மீது விமர்சனம்
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் சுவிஸ் நாட்டவர்கள் 5,000க்கும் அதிகமானவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசு மீது விமர்சனம்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.

பல்வேறு நாடுகள், மத்திய கிழக்கு பகுதியிலிருக்கும் தங்கள் குடிமக்களை மீட்க நடவடிக்கை எடுத்துவருகின்றன.
சுவிஸ் நாட்டவர்கள் 5,000க்கும் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருக்கும் நிலையில், அவர்களை தவிக்க விட்டுள்ளதாக சுவிஸ் அரசு மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், மத்திய கிழக்கிலிருக்கும் சுவிஸ் குடிமக்களை மீட்க விமானங்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனத்துடன் அரசு பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், விமான நிறுவனமோ, தனது பணியாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும், ஆகவே, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |