சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் அதிகம் கவலைப்படுவது இதற்குத்தானாம்...
சுவிஸ் மக்கள், அதிகரித்துவரும் மருத்துவம் தொடர்பான செலவுகள் குறித்துத்தான் அதிகம் கவலைப்படுகிறார்களாம்.
பணம் தொடர்பான கவலைகள்
வேறு வகையில் கூறினால், பணம் அல்லது செலவீனம் தொடர்பான விடயங்கள்தான் சுவிஸ் நாட்டவர்களை அதிகம் கவலையடையச் செய்கின்றனவாம்.
சுவிஸ் மக்களில் 80 சதவிகிதத்தினர், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை அதிகரித்து வருவதே தங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் முக்கிய விடயம் என்று கூறியுள்ளார்கள். நாடு முழுவதுமே மக்களுக்கு இந்த கவலை உள்ளது. அத்துடன், அனைத்து வயதினருக்கும் இந்த கவலை உள்ளதாம்.
காப்பீட்டு பிரீமியத்துக்கு அடுத்தபடியாக மக்களுக்கு கவலையை ஏற்படுத்தும் விடயங்கள் பணவீக்கம், வீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவையாகும்.
மொத்தத்தில், பணம் தொடர்பான விடயங்கள்தான் சுவிஸ் நாட்டவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் விடயங்களில் முதலிடம் பிடிக்கின்றன. அதற்குப் பிறகுதான் சுற்றுச்சூழலைக் குறித்த கவலை எல்லாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |