சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து அதிகரிக்க இருக்கும் மருத்துவச் செலவுகள்
Swiss health costs set to rise by billions of francs: சுவிட்சர்லாந்தில் மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்க உள்ளன.
சுவிட்சர்லாந்தில் மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், 2028வரை இதே நிலை நீடிக்கும் என ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்க இருக்கும் மருத்துவச் செலவுகள்
ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH சூரிச் நிறுவனத்திலுள்ள KOF நிறுவனத்தின் கணிப்புகளின்படி, 2024ஆம் ஆண்டில் 97.2 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்த மருத்துவச் செலவுகள், 2028ஆம் ஆண்டுக்குள் 114.5 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர இருக்கின்றன.

கணக்கிட்டுப் பார்த்தால், மருத்துவச் செலவு, நான்கு ஆண்டுகளில் 17.3 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அதிகரிக்கிறது.
குறிப்பாக, வெளிநோயாளிகள் சிகிச்சை மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு ஆகியவையே இந்தச் செலவுகளுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.
இதற்கிடையில், 2028ஆம் ஆண்டு முதல், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு ஒரே மாதிரியான நிதி ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், நிதிச்சுமை மருத்துவக் காப்பீட்டு நிதிகளிலிருந்து, மாகாணங்கள் தோளுக்கு மாற்றப்படப்போகிறது.