மீண்டும் மாஸ்க் அணிய பரிந்துரைக்கும் சுகாதாரத்துறை நிபுணர்கள்
சுவிட்சர்லாந்தில், மக்கள் குளிர்காலத்தில் மாஸ்க் அணிந்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
மீண்டும் மாஸ்க் அணிய பரிந்துரை
கொரோனா காலகட்டம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மாஸ்க் அணிய பரிந்துரைத்துள்ளார்கள் சுவிஸ் சுகாதாரத்துறை நிபுணர்கள்.
மீண்டும் ப்ளூ மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், ETH சூரிக் மற்றும் Basel பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நிபுணர்கள், கட்டிடங்களுக்குள்ளும், பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும்போதும், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருப்போரும் மாஸ்க் அணிந்துகொள்ள பரிந்துரைத்துள்ளார்கள்.
முன்போல் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலை உருவாக வாய்ப்பில்லை என்றாலும், கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது.
ப்ளூ இப்போதைக்கு குறைவான அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தினாலும், குளிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |