மருத்துவக் காப்பீடு தொடர்பில் சுவிஸ் குடிமக்களுக்கு ஒரு செய்தி
சுவிட்சர்லாந்தில், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்கள் அதிகரிக்க உள்ளதாக ஃபெடரல் பொது சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்
அடுத்த ஆண்டு, சுவிஸ் குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் சராசரியாக 4.4 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.
அதன்படி, மாத காப்பீட்டு பிரீமியம் 393.30 சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரிக்க இருப்பதாக சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெரியவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் 18.50 சுவிஸ் ஃப்ராங்குகள், அதாவது, 4.1 சதவிகிதமும், இளைஞர்களுக்கான பிரீமியம் 13.30 சுவிஸ் ஃப்ராங்குகள், அதாவது, 4.2 சதவிகிதமும், சிறுவர்களுக்கான பிரீமியம் 5.70 சுவிஸ் ஃப்ராங்குகள், அதாவது, 4.9 சதவிகிதமும் அதிகரிக்க உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |