வறட்சியால் வற்றிவரும் நதி: சுவிஸ் இறக்குமதி பாதிப்பு
சுவிட்சர்லாந்திலுள்ள முக்கிய நதி ஒன்றில் தண்ணீர் வற்றிவருவதால் சுவிஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த சுவிட்சர்லாந்தை கடலுடன் இணைக்கும் ஒரே விடயம் ரைன் நதிதான்.
அந்த நதியே வற்றிவருவதால், நாட்டுக்குள் கப்பல் மூலம் நடைபெறும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது.
வறட்சியால் வற்றும் நதி
உலக நாடுகள் பலவற்றிலுள்ள மக்கள் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல விரும்பித் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் முக்கியமான நாடு சுவிட்சர்லாந்து.

ஆனால், மழைப்பொழிவு குறைந்துள்ளதால் சுவிட்சலாந்தில் வறட்சி உருவாகியுள்ளது.
இந்த வறட்சி, இறக்குமதியையும் பாதித்துள்ளதுதான் கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்!
அதாவது, சுவிட்சர்லாந்தில், எண்ணெய் தொடர்புடைய தயாரிப்புகள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் உரம் ஆகியவற்றில் 8 முதல் 10 சதவிகிதம், ரைன் நதி மூலமாகத்தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஆனால், ரைன் நதியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே பல கப்பல்கள் நின்றுவிட்டன. சில குறைவான சரக்குகளுடன் பயணிக்கின்றன.
ஆக, சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது. என்றாலும், அத்தியாவசிய பொருட்கள் கப்பல்களுக்கு பதிலாக தற்போது ரயில் மூலம் கொண்டு வரப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக ஃபெடரல் தேசிய பொருளாதார வழங்கல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |