உலக தரவரிசையில் சுவிட்சர்லாந்துக்கு 10-ஆம் இடம்! எதில் தெரியுமா?
அமெரிக்காவின் விலங்கு உரிமைகள் தொடர்பான சர்வதேச ஆய்வில், தரவரிசைப்படி சுவிட்சர்லாந்துக்கு 10-ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில் விலங்கு உரிமைகளுக்கான சிறந்த மற்றும் மோசமான நாடுகளை அடையாளம் காண சர்வதேச தரவு மூலங்களிலிருந்து The Swiftest நிறுவனம் புள்ளிவிவரங்களை சேகரித்தது. அதன் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது.
விலங்குகளின் உணர்வு மற்றும் விலங்குகளின் துன்பத்தை அங்கீகரித்தல், விலங்குகளின் கொடுமைக்கு எதிரான சட்டங்கள் மற்றும் ஒரு ஹெக்டேர் பயிர் நிலத்திற்கு பூச்சிக்கொல்லி பயன்பாடு உட்பட மொத்தம் ஒன்பது அளவுகோல்களை அமைத்து, அதன் அடிப்படியில் இந்த தரவரிசை கொடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், உரோமத் தடை (partial fur ban), பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைந்த சதவீதம் மற்றும் தனிநபர் இறைச்சி நுகர்வு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
அதன் அடிப்படியில், சுவிட்சர்லாந்துக்கு B+ தரத்துடன் 10-ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே தரவரிசைப் பட்டியலில் லக்சம்பர்க் முதலிடம் பிடித்துள்ள நிலையில், பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும், முதல் பத்து இடங்களில் ஆஸ்திரியா, செக்கியா, பெல்ஜியம், குரோஷியா,ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
மிக மோசமான விலங்கு உரிமைகள் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.