சுவிஸ் உள்துறை அமைச்சரின் விமானத்தை சுற்றி வளைத்த பிரான்ஸ் விமானப்படை
பிரான்ஸ் நாட்டிலுள்ள தடை செய்யப்பட்ட பகுதி ஒன்றிற்குள் சுவிஸ் விமானம் ஒன்று நுழைந்ததையடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதுவும், அந்த விமானத்தை இயக்கிக்கொண்டிருந்தவர் சுவிஸ் உள்துறை அமைச்சரான Alain Berset!
விமான பைலட் உரிமம் பெற்றவரான Alain Berset, சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார். சுவிட்சர்லாந்திலிருந்து புறப்பட்ட அவரது விமானம் பிரான்ஸ் இராணுவ தளம் ஒன்று அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்துள்ளது.
உடனடியாக பிரான்ஸ் விமானப்படை Alain Bersetஇன் விமானத்தை தரையிறக்கச் செய்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகள் Alain Bersetஐ விசாரித்ததில், அவர் தவறுதலாக தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து அவர் தன் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிகாரிகள், இந்த விடயம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.