சுவிட்சர்லாந்தில் உச்ச கட்ட வறட்சி எச்சரிக்கை
சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.
குறைவான மழை மற்றும் தொடர் வெப்ப அலைகள் காரணமாக சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.
உச்ச கட்ட வறட்சி
சுவிட்சர்லாந்தில் வறட்சி, நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லை, சில நீர் நிலைகள் வறண்டுவிட்டன என தகவல்கள் வெளியாகிவருகின்றன.

வழக்கமாக ஆல்ப்ஸ் மலையில் தங்கள் கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள், கால்நடைகளுக்கு புல் பற்றாக்குறை உருவாகியுள்ளதால் கஷ்டப்பட்டுவருகிறார்கள்.
சுற்றுலாப்பயணிகள் உல்லாசப்பயணம் மேற்கொள்ளும் ஏரிகள் சில வறண்டு ஏரியின் படுகை வெடிக்கும் நிலை உருவாகியுள்ளதால், சுற்றுலாவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகள் வறண்டுபோனதால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் மாண்டுவிட்டன. பல இடங்களில் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆக, உலக நாடுகள் பலவற்றிலிருந்து கோடையை செலவிடுவதற்காக மக்கள் சுவிட்சர்லாந்துக்குச் செல்வது வழக்கம்.
ஆனால், அந்த சுவிட்சர்லாந்திலேயே வறட்சி என வெளியாகியுள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |