சுவிட்சர்லாந்தில் விமான எரிபொருள் கையிருப்பு நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
சுவிட்சர்லாந்தில், விமான எரிபொருள், சட்டப்படி கையிருப்பில் இருக்கவேண்டிய அளவைவிட குறைவாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான எரிபொருள் கையிருப்பு நிலவரம்
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, சட்டப்படி 90 நாட்களுக்கான விமான எரிபொருள் கையிருப்பில் இருக்கவேண்டும்.

ஆனால், தற்போதைக்கு 72 நாட்களுக்கான எரிபொருளே கையிருப்பில் உள்ளதாக சுவிஸ் தேசிய பொருளாதார வழங்கலுக்கான ஃபெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால், விமானத்துறை அதிகாரிகளோ, இப்போதைக்கு எரிபொருள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், அப்படியே பற்றாக்குறை ஏற்பட்டால் அதை சமாளிக்க பிளான் B தயாராக உள்ளதாகவும் கூறிவருகிறார்கள்.
அதேபோல, முக்கிய விமான நிறுவனங்களும், தங்களிடம் இந்த ஆண்டுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், ஆகவே, குறுகிய தூரம் பயணிக்கும் விமான சேவைகள் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |