சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய கால்பந்து கூட்டமைப்பு பிரபலம்
பிரபல தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் அலுவலர் ஒருவர் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சுவிஸ் நீதித்துறையிடம் சிக்கியுள்ளார்.
சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பான Conmebolஇன் முன்னாள் செகரட்டரி ஜெனரலான Eduardo Deluca (79) என்பவர், 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் 18,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் செலுத்தும்படிஅவருக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அந்த அபராதத்தை உடனே செலுத்தத் தேவையில்லை என்று தற்போது கூறப்பட்டுள்ளது.
மேலும், லஞ்சம் வாங்கியது, தொலைக்காட்சி மற்றும் மார்க்கெட்டிங் உரிமங்கள் வழங்க சட்ட விரோதமாக பணம் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், Conmebol கால்பந்து கூட்டமைப்புக்கு 2.5 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்களையும் அவர் வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அதில், 1.5 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்கள் Conmebol கால்பந்து கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுவிட்டதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
Eduardo சுவிட்சர்லாந்தில் பல வங்கிக்கணக்குகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.