13 சிறிய நாடுகளுடன் கைகோர்க்கும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து, 13 சிறு மற்றும் நடுத்தர அளவுள்ள நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது.
13 நாடுகளுடன் கைகோர்க்கும் சுவிட்சர்லாந்து
சுவிஸ் பொருளாதாரத்துறை அமைச்சரான Guy Parmelin நேற்று அறிமுகம் செய்த, 'Future of Investment and Trade Partnership' என அழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்தின் கீழ், சுவிட்சர்லாந்தின் தலைமையின் கீழ், புரூனே, சிலி, கோஸ்டா ரிக்கா, ஐஸ்லாந்து, Liechtenstein, மொராக்கோ, நியூசிலாந்து, நோர்வே, பனாமா, ருவாண்டா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் சுவிட்சர்லாந்துடன் கைகோர்க்கின்றன.
சிறிய நாடுகளைப் பொருத்தவரை அவற்றிற்கு உலக பொருளாதாரத்தில் தங்கள் தாக்கத்தை அதிகரிக்கும் வாய்ப்பை இந்த ஒப்பந்தம் அதிகரிக்கும்.
அதேபோல, சுவிட்சர்லாந்து தனது வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், விரிவாக்கம் செய்யவும் இந்த ஒப்பந்தம் உதவி செய்யும் என்பதால், இந்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் ஒரு ஒப்பந்தம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |