இன்னொரு டோஸ் தடுப்பூசி கூட தரலாம்: கொரோனா பரவல் சூழல் குறித்து பேசிய சுவிஸ் முக்கிய நிபுணர்
தொடர்ந்து உருமாற்றம் காணும் கொரோனா தொற்றால், ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசியால் பலன் கிடைக்கப் போவதில்லை என சுவிட்சர்லாந்தின் முக்கிய நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறான சூழலை எதிர்கொள்ள சுவிஸ் அரசாங்கம் போதிய தடுப்பூசிகளை சேமித்து வைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது சுகாதார பெடரல் அலுவலகத்தின் முன்னாள் துணை இயக்குநரான ஆண்ட்ரியாஸ் ஃபாலர் என்பவரே தடுப்பூசி கொள்முதல் பற்றி மிகவும் துணிந்த நடவடிக்கைகள் அவசியம் என்ற கடுத்தை வெளியிட்டுள்ளார்.
புதிய உருமாற்றம் கண்ட தொற்றானது இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என குறிப்பிட்டுள்ள ஃபாலர், எனவே வரவிருக்கும் மாதங்களுக்கு சுவிஸ் நிர்வாகம் நன்கு தயாராக இருப்பது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெடரல் நிர்வாகம் இதுவரை ஒதுக்கியுள்ள தடுப்பூசியின் அளவு போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய கொரோனாவைப் பற்றி மட்டுமல்ல, எதிர்கால தொற்றுநோய்களையும் நீங்கள் சிந்திக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று சமீப காலத்தில் ஓய்ந்து விடாது என கூறியுள்ள ஃபாலர், அதனாலையே மாடர்னா போன்ற நிறுவனங்கள் அடுத்தகட்ட ஆய்வுக்கு தயாராகியுள்ளது என்றார்.
தென்னாபிரிக்காவில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றானது மிக ஆபத்தானது என குறிப்பிட்டுள்ள ஃபாலர், இதுவரை இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மூன்றாவது ஒரு சிறப்பு டோஸ் கூட அளிக்கப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
மாடர்னா நிறுவனம் அவ்வாறான சிறப்பு கொரோனா டோஸ் ஒன்றை இந்த ஆணு இறுதியில் வெளியிட இருப்பதையும் ஃபாலர் சுட்டிக்காட்டியுள்ளார்.