ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை: சுவிட்சர்லாந்தை அதிரவைத்துள்ள சம்பவம்
சுவிட்சர்லாந்தில் ஒரு தாயும் அவரது இரு மகள்களும் கொலை செய்யப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை
செவ்வாய்க்கிழமை மாலை, சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்திலுள்ள Corcelles என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், 47 வயதுடைய ஒரு பெண்ணும், முறையே 10 மற்றும் 3 வயதுடைய அவரது இரண்டு மகள்களும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் மூன்று பேரையும் கொன்றதாக சந்தேகிக்கப்படும் அந்தப் பெண்ணின் முன்னாள் கணவரான 52 வயதுடைய நபரும் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்துள்ள பொலிசார், அவரது காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல், அந்த நபர் தன் மனைவியைப் பிரிந்து Le Locle என்னுமிடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடையில், கணவனும் மனைவியும் ஒருவர் மீது மற்றவர் மாறி மாறி பொலிசில் புகாரளித்துவந்துள்ளனர்.
ஆனால், 2022க்குப் பிறகு அவர்களிடமிருந்து புகார் எதுவும் வராததால், பொலிசார் அவர்களைக் கண்காணிப்பதை நிறுத்தியுள்ளார்கள்.
இப்படி ஒரு துயரம் ஏற்படும் என பொலிசாருக்கு எந்த தகவலும் இல்லை என்கிறார் அரசு சட்டத்தரணி.
கொல்லப்பட்ட பெண் மற்றும் அவரது மகள்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |