முதியவருக்கு மகனிடமிருந்து வந்த செய்தி: பின்னர் கிடைத்த ஏமாற்றம்
சுவிட்சர்லாந்தில், வாழும் முதியவர் ஒருவருக்கு அவரது மகனிடமிருந்து ஒரு செய்திவந்தது.
பிறகுதான் அவருக்கு தான் ஒரு மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது!
முதியவருக்கு மகனிடமிருந்து வந்த செய்தி
சுவிட்சர்லாந்தின் Fribourg நகரில் வாழும் 79 வயது நபர் ஒருவருக்கு மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், அப்பா, இது எனது புதிய மொபைல் எண், இனி இந்த எண்ணில் வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்புங்கள் என்று கூறியது அந்த செய்தி.
பின்னர் அன்று மாலை தன் ‘மகனுக்கு’ அந்த எண் மூலம் 19,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அனுப்பினார் அந்த முதியவர்.
பிறகு தன் மகனை சந்திக்கும்போதுதான் அவருக்குத் தெரிந்தது, அந்த குறுஞ்செய்தி அனுப்பியது தன் மகன் அல்ல என்பதும், தான் மோசடி ஒன்றில் சிக்கி பணத்தை இழந்துவிட்டதும்!
இந்த நவீன மோசடி குறித்து பொலிசில் புகாரளித்துள்ளார் பணத்தை இழந்த அந்த முதியவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |