சுவிட்சர்லாந்தில் 6 கோடி ரூபாய் வேலையை உதறிய நபர்: இப்போது என்ன சொல்கிறார் பாருங்கள்
உலக அளவில் பிரபலமான ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கிடைக்கும் அதிக சம்பளம் தரும் ஒரு வேலை, பலருக்கும் கனவு.
ஆனால், தன் மனதுக்குப் பிடித்த பாதையை தொடர்வதற்காக அத்தகைய வேலை ஒன்றை உதறினார் மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர் ஒருவர்.
இந்நிலையில், தான் செய்ததிலேயே அதுதான் முட்டாள்தனமாக செயல் என்று கூறி இப்போது வருந்துகிறார் அவர்!
6 கோடி ரூபாய் வேலையை உதறிய நபர்
சுவிட்சர்லாந்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு 200,000 டொலர்கள் சம்பாதிக்கும் வேலையில் இருந்தார் கிறிஸ்டியன் ஹார்ம்ஸ்.

200,000 டொலர்கள் என்பது, இலங்கை மதிப்பில் 6,74,84,720.00 ரூபாய் ஆகும்.
தனது 26ஆவது வயதில் மைக்ரோசாஃப்ட் வேலையை விட்டு விட்டு, உள்ளடக்க உருவாக்கத் துறையில் (content creation) தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார் ஹார்ம்ஸ்.
உள்ளடக்கத்தை உருவாக்குவது, பிராண்டுகளுடன் பணியாற்றுவது மற்றும் இணையத்தில் வாய்ப்புகளைக் கண்டறிவது ஆகியவற்றில் கவனம் செலுத்திய நிலையிலும், பல மாத திட்டமிடலும் பரிசோதனைகளும் ஹார்ம்ஸ் எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுக்கவில்லை.
தான் மைக்ரோசாஃப்ட் வேலையை விடுவது தொடர்பில் எடுத்த முடிவைப் பற்றி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ள ஹார்ம்ஸ், அந்த வேலையில் கிடைத்த சம்பளம், நிலைத்தன்மை மற்றும் அடையாளம் முதலான விடயங்களை எண்ணும்போது, மைக்ரோசாஃப்ட்டை விட்டு வெளியேறியதுதான், தான் செய்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான செயலாக இருக்கக்கூடும் என்று தான் இப்போது கருதுவதாக தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், அவர் பேசுவதைப் பார்க்கும்போது, தான் எடுத்த முடிவு சரியானதா இல்லையா என்பது அவருக்கே புரியவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.
இதற்கிடையில், அவரது கதையைப் படித்த பலரும், அவரை உறசாகப்படுத்துவது போல் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவர், நீ நிச்சயம் அதை அடைந்துவிடுவாய் சகோதரா என்று கூற, மற்றொருவரோ, எனக்கு இது துணிச்சலானதாகத் தெரிகிறது என்கிறார்.
மற்றொருவர், சில நேரங்களில் இதுபோன்ற விடயங்கள் கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும், உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றி நீங்கள் துணிந்து இறங்கியது பாராட்டுக்குரியது என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |