புகலிடக்கோரிக்கையாளர்கள் குறைந்ததால் வேலையிழந்த புலம்பெயர்தல் அலுவலர்கள்
சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் புலம்பெயர்தல் அலுவலர்கள் 60 பேர் வேலையிழந்துள்ளார்கள்.
குறைந்த புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு, 25,781 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளார்கள். முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை 7 சதவிகிதம் குறைவு ஆகும்.

ஆகவே, புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கும் 60 பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
அந்த பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படுவது, புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கையைப் பொருத்துதான் என்று கூறியுள்ள புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம், இந்த ஆண்டு புகலிடம் கோருவோர் எண்ணிக்கை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |