இரட்டை வேடம்... தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த சுவிஸ் உள்துறை அமைச்சர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு
பிரான்ஸ் நாட்டிலுள்ள தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சுவிஸ் உள்துறை அமைச்சரின் விமானம் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டிலுள்ள தடை செய்யப்பட்ட பகுதி ஒன்றிற்குள் சுவிஸ் விமானம் ஒன்று நுழைந்தது. பிரான்ஸ் இராணுவ விமானதளம் ஒன்றிற்கு அருகே அந்த விமானம் பறக்கவே, பிரான்ஸ் விமானப்படை விமானங்கள் இரண்டு உடனடியாக அனுப்பப்பட, அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனால், அந்த விமானத்தை இயக்கிக்கொண்டிருந்தவர் சுவிஸ் உள்துறை அமைச்சரான Alain Berset என்பது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி ஏற்பட்டது.
விசாரணைக்குப்பின் Alain Berset தன் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும், அதைத் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, Alain Bersetக்கு விமான பைலட் உரிமம் உள்ளது என்பதே பலருக்கு தெரியாதாம். அவர் அதை இரகசியமாக வைத்திருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
lain Berset (c) WEF
இந்நிலையில், அவர் இரட்டை வேடம் போடுவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், அவர் சார்ந்த Social Democrat கட்சி, சுற்றுச்சூழலை காரணமாக காட்டி, சூரிச்சில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் விமான கண்காட்சி ஒன்றிற்கு தடை விதிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.
அக்கட்சி விமான கண்காட்சிக்கு தடை விதித்துள்ள நிலையில், Alain Berset மட்டும் தனி விமானத்தில் பறப்பதை பொழுபோக்காக வைத்திருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, கட்சியின் கொள்கையெல்லாம் சிலருக்குத்தானா, எல்லாருக்கும் இல்லையா என விமர்சனம் எழுந்துள்ளது.