அரசாங்க இரகசியத்தை உளறிக்கொட்டிய சுவிஸ் அமைச்சர்?: விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள்
பேட்டி ஒன்றின்போது அரசாங்க இரகசியத்தை உளறிக்கொட்டிய அமைச்சர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர் சுவிஸ் அதிகாரிகள்.
முன்னாள் சுவிஸ் கேபினட் அமைச்சரான Moritz Leuenberger என்பவர், பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றின்போது, ஒரு பிணைக்கைதி விடுவிக்கப்படுகிறார் என்றால், அதற்காக ஒரு பிணைத்தொகை வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பிணைக்கைதிகளை மீட்க பிணைத்தொகை கொடுக்கப்படுவதில்லை என்பது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.
ஆனால், Leuenbergerஇன் பேட்டி அதற்கு முரணாக இருந்ததையடுத்து, அரசாங்க இரகசியத்தை அவர் வெளியிட்டதாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நீதித்துறையிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.