புலம்பெயர்ந்தோரால் நாட்டுக்கு லாபம்: சுவிஸ் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து
சுவிட்சர்லாந்து, புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை ஒன்று தொடர்பில் வாக்களிக்க உள்ள நிலையில், சுவிஸ் அமைச்சர் ஒருவர், புலம்பெயர்தலுக்கு ஆதரவாக கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
சுவிஸ் அமைச்சரின் எச்சரிக்கை பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், புலம்பெயர்தல் வீடுகள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து மற்றும் பொது சேவைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பிரேரணை தொடர்பில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் சுவிஸ் உள்துறை அமைச்சரான எலிசபெத் (Elisabeth Baume-Schneider).
வெளிநாட்டுப் பணியாளர்கள் சுவிஸ் நிதி அமைப்புக்கு வலு சேர்ப்பதாக தெரிவித்துள்ள அவர், குறிப்பாக, வெளிநாட்டுப் பணியாளர்கள் சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கு பெரும் பங்களிப்பதாக தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர், தாங்கள் பெற்றுக்கொள்வதைவிட சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கு கூடுதலாக பங்களிப்புச் செய்வதாகவும், அவர்களால் ஓய்வூதிய திட்டத்துக்கு உபரி நிதி கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார் எலிசபெத்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |