Credit Suisse வங்கிக்கு 109 பில்லியன் சுவிஸ் பிராங்கு நிவாரணம்: எம்பி-க்கள் கடும் எதிர்ப்பு
சுவிட்சர்லாந்து அரசாங்கம் Credit Suisse வங்கிக்கு 109 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் நிதி மீட்பு பாதியாக (நிவாரணமாக) வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளதற்கு நாடாளுமன்றத்திற்குள்ளேயே மாறுப்பட்ட கடுத்துக்கள் உள்ளன.
கிரெடிட் சூயிஸுக்கு 109 பில்லியன் சுவிஸ் பிராங்குகளின் (சுமார் $120.5 பில்லியன்) சுவிஸ் அரசாங்கத்தின் நிதி மீட்புப் பொதி உத்தரவாதத்திற்கு எதிராக செவ்வாய்கிழமை பிற்பகுதியில், சுவிட்சர்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபை வாக்களித்தது.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த நிதிக்கான அரசின் உறுதிப்பாட்டை முறியடிக்க முடியாது என்பதால், இந்த வாக்கெடுப்பு வெறும் அடையாள வாக்கெடுப்பாக இருந்தது.
AFP/Getty Images
சுவிஸ் நாடாளுமனற உறுப்பினர்கள் கிரெடிட் சூயிஸுக்கு நிதி உத்தரவாதம் வழங்குவதில் தங்கள் நிலைப்பாட்டில் பிளவுபட்டுள்ளனர். கீழ்சபையில் 102 சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க உத்தரவாதங்களுக்கு எதிராக வாக்களித்த நிலையில், மேல்சபை ஆதரவாக வாக்களித்தது.
இரு நாடாளுமன்ற அவைகளிலும் முரண்பட்ட வாக்கெடுப்பு முடிவு கிடைத்துள்ளதால் புதன்கிழமை மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்படுகிறது.
iStock
Credit Suisse நிறுவனத்தை UBS வங்கி 3.2 பில்லியன் சுவிஸ் பிராங்க் ஒப்பந்தத்தில் கையகப்படுத்தியது. ஜனாதிபதி அலைன் பெர்செட்டின் அரசாங்கமும் 109 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை வரி செலுத்துவோரின் பணத்தில் கையகப்படுத்துவதை ஆதரிக்க ஒப்புக்கொண்டது, இது நாடாளுமன்ற உறுப்பினர்களை கோபப்படுத்தியுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி, சுவிஸ் சட்டமியற்றும் குழுவின் கிட்டத்தட்ட 250 உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்த்தின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட துணைக்குழுவின் ஒப்புதலுடன் நிதி உத்தரவாதத்தை அங்கீகரிக்கிறது.