சுவிஸ் இளம்பெண் கொலை வழக்கு: சுவிட்சர்லாந்துக்கே சென்று குடும்பத்தினருக்கு மிரட்டல்... புதிய தகவல்
சுவிஸ் இளம்பெண் ஒருவர் இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் தந்தைக்கும் பங்கிருப்பது தெரியவந்துள்ளது.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அழகிய இளம்பெண்
இந்தியாவின் டெல்லியிலுள்ள திலக் நகர் என்னுமிடத்தில் கார் ஒன்றிற்குள் வெளிநாட்டவரான அழகிய இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அவரது பெயர் நினா பெர்கெர் (Nina Berger, 30) என்பதும், அவர் சுவிஸ் நாட்டவர் என்பதும் தெரியவந்தது.
அவரை குர்பிரீத் சிங் என்னும் இந்தியர் இந்தியாவுக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த பொலிசார், அவரது மொபைல் போன், அவரது வீடு ஆகியவற்றை சோதனை செய்துவந்தார்கள்.
புதிய தகவல்கள்
நினாவுக்கும் குர்பிரீத் சிங்குக்கும் இடையில், சுமார் 2,500 குறுஞ்செய்திகள் பகிரப்பட்டுள்ளன. அவற்றை பொலிசார் தொடர்ந்து ஆராய்ந்துவரும் நிலையில், சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
குறுஞ்செய்திகளில் ஒன்றில், நினா, குர்பிரீத் சிங்கிடம், அவரது தந்தை சுவிட்சர்லாந்துக்குச் சென்று தன் பெற்றோரை மிரட்டுவதாகவும், அவரை தயவு செய்து தன் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆக, குர்பிரீத்தின் தந்தையான அர்ஜூன் சிங்கும், நேரே சுவிட்சர்லாந்திலுள்ள நினா வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரை மிரட்டியது தெரியவந்துள்ளது.
நினா, குர்பிரீத் சிங்கிடம் 8.3 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அது தொடர்பாகவே குர்பிரீத் சிங்கின் தந்தை நினாவின் பெற்றோரை மிரட்டியது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், நினாவின் உடலுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், மற்றொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நினாவின் கழுத்து இரும்புச் சங்கிலியால் நெறிக்கப்பட்டதுடன், அவர் பிளாஸ்டிக் கவர் ஒன்றிற்குள் அடைக்கப்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.
பொலிசார், குர்பிரீத் சிங்கின் தந்தையான அர்ஜூன் சிங்கை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |