ஓவியங்கள் பற்றி தகவல் கொடுத்தால் 35 லட்சம் வெகுமதி! சுவிஸ் அருங்காட்சியகம் அறிவிப்பு
காணாமல் போன 2 மதிப்புமிக்க ஓவியங்கள் பற்றிய தகவல்களுக்கு ரூ. 35 லட்சம் வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது சுவிஸ் அருங்காட்சியகம்.
10,000 சுவிஸ் பிராங்க் வெகுமதி
சுவிட்சர்லாந்தின் சிறந்த கலை அருங்காட்சியகங்களில் ஒன்றான Kunsthaus Zurich, காணாமல் போன இரண்டு ஓவியங்களைக் கண்டறிய உதவும் தகவல்களுக்கு 10,000 சுவிஸ் பிராங்க் (இலங்கை பணமதிப்பில் ரூபா.34.3 லட்சம்) வெகுமதியாக வழங்குவதாக சூரிச் காவல்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இந்த அருங்காட்சியகத்தில் இருந்து இரண்டு சிறிய கலைப்படைப்புகள் காணாமல் போயின. அவை எங்கு போனது, என்ன ஆனது என எந்த தடயமும் கிடைக்கவில்லை.
Dirck de Bray, Daffodils and Other Flowers in a Glass Vase on a Marble Slab (1673)/ Kunsthaus Zürich.
காணாமல் போன ஓவியங்கள்
காணாமல் போன ஓவியங்களில் ஒன்று ஃபிளெமிஷ் ஓவியர் Robert van den Hoecke வரைந்தது, மற்றொன்று டச்சு பொற்கால கலைஞரான Dirck de Bray வரைந்தது.
2022 டிசம்பர் இறுதியிலிருந்து இந்த இரண்டு மதிப்புமிக்க ஓவியங்களைக் காணவில்லை. சூரிச் கன்டோனல் காவல்துறையின் ஆரம்ப விசாரணையின்படி, அவை திருடப்பட்டுள்ளன.
Robert van den Hoecke, Soldiers in the camp (mid-17th century)/Kunsthaus Zürich.
இந்நிலையில், குற்றவாளிகள் அல்லது ஓவியங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டு ஓவியங்களைக் கண்டறிய உதவும் தகவல்களுக்கு 10,000 சுவிஸ் பிராங்க் (இலங்கை பணமதிப்பில் ரூபா.34.3 லட்சம்) வெகுமதியாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 2022-ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, அருங்காட்சியகம் சுத்தம் மற்றும் மறுசீரமைப்புக்காக 700-க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த இரண்டு ஓவியங்களின் எந்த தடயமும் பின்னர் கண்டுபிடிக்கப்படவில்லை, செப்டம்பர் 21 மற்றும் டிசம்பர் 22-க்கு இடையில் அவை திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு ஓவியங்களும் ஓக் மரத்தில் வர்ணம் பூசப்பட்டு, கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
Kunsthaus Zürich.
தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கலைப்படைப்புகள் உலகின் மிகப்பெரிய தரவுத்தளமான கலை இழப்புப் பதிவேட்டில் அவை பட்டியலிடப்பட்டுள்ளன. 1990-ல் லண்டனில் நிறுவப்பட்ட இப்பதிவேடு தற்போது 700,000-க்கும் மேற்பட்ட பொருட்களை பட்டியலிடுகிறது.
சூரிச் அருங்காட்சியகம்
குன்ஸ்தாஸ் சூரிச் அருங்காட்சியகத்தில் 13-ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரையிலான ஏறக்குறைய 4,000 ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் மற்றும் 95,000 வரைகலை வேலைப்பாடுகளுடன், மிக முக்கியமான கலை சேகரிப்புகள் உள்ளன. அதில் சுமார் 1,000 படைப்புகள் நிரந்தரக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Paintings, Switzerland, Zurich, Museum, Kunsthaus Zurich
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |