சாகச விளையாட்டில் ஈடுபட்ட சுவிஸ் நாட்டவர் விபத்தில் பலி
பிரான்சில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட இருவர் விபத்தொன்றில் பலியானார்கள், அவர்களில் ஒருவர் சுவிஸ் நாட்டவர்.
சாகச விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலி
சனிக்கிழமை மதியம் 1.00 மணியளவில், தென்கிழக்கு பிரான்சிலுள்ள Saint-Pons என்னுமிடத்தில், சிறிய ரக விமானம் ஒன்று கிளைடர் ஒன்றை இழுத்துச் செல்லும் சாகச விளையாட்டில் சுவிஸ் நாட்டவர் ஒருவரும் ஜேர்மன் நாட்டவர் ஒருவரும் ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது எதிர்பாராமல் அந்த விமானமும் கிளைடரும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
அந்த துயர விபத்தில், சுவிஸ் நாட்டவரும் ஜேர்மன் நாட்டவருமாகிய அந்த இருவரும் உயிரிழந்துவிட்டார்கள்.
விமானமும் கிளைடரும் விழுந்ததில் அந்த பகுதியிலிருந்த மரங்கள் செடிகொடிகளில் தீப்பற்றியுள்ளது. என்றாலும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
எதனால் இந்த விபத்து நேர்ந்தது என்பது தெளிவாகாத நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரனை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |