யூரோ கிண்ணம்.. காலிறுதிக்கு நுழைந்துள்ள சுவிஸ் தேசிய அணி ஈட்டிய தொகை எவ்வளவு?
யூரோ கிண்ணம் தொடரில் சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு நுழைந்துள்ள நிலையில், இன்று ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.
சுவிஸ் தேசிய அணி பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை தொடரில் இருந்து வெளியேற்றி வரலாறு படைத்தது. வெள்ளிக்கிழமை தொடங்கும் காலிறுதி ஆட்டத்தில் சுவிஸ் தேசிய அணி இன்னொரு பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
இந்த நிலையிலேயே சுவிஸ் தேசிய அணி, யூரோ கிண்ணம் தொடரில் இதுவரை ஈட்டியுள்ள தொகை குறித்து ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இந்த முறை யூரோ கிண்ணம் தொடரில் சாம்பியன் அணிக்கு 331 மில்லியன் யூரோ பரிசாக அளிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் சாம்பியன் அணிக்கு 371 மில்லியன் யூரோ பரிசாக வழங்கப்பட்டது.
மட்டுமின்றி 2016 யூரோ தொடரை ஒப்பிடுகையில் ஒவ்வொரு அணிக்கான நுழைவு கட்டணமும் அதிகரிக்கப்பட்டு, தற்போது சுமார் 10 மில்லியன் யூரோ கட்டணமாக வசூலித்துள்ளனர்.
சுவிஸ் தேசிய அணியை பொறுத்தமட்டில், யூரோ கிண்ணம் தொடரில் இதுவரை 15 மில்லியன் யூரோ தொகையை வெற்றிகளின் மூலம் ஈட்டியுள்ளனர்.
பொதுவாக லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிக்கு 1 மில்லியன் யூரோ பரிசாக அளிக்கப்படும். ஆட்டம் சமனில் முடிந்தால் 500,000 யூரோ வழங்கப்படும்.
இதன் இரண்டாவது சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு 1.5 மில்லியன் யூரோ பரிசாக அளிக்கப்படும். காலிறுதி ஆட்டங்களில் வெல்லும் அணிக்கு 2.5 மில்லியன் யூரோ பரிசளிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, சுவிஸ் தேசிய அணியில் வீரர்களுக்கு அளிக்கப்படும் தொகை தொடர்பில் ரகசியம் காக்கப்படுகிறது.
ஆனால் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வெற்றிக்காக இத்தாலிய வீரர்கள் ஒருவரும் 250,000 யூரோ பரிசாக அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது..