இலவசத்துக்கு ஆசைப்பட்ட சுவிஸ் நாட்டவரால் வெளிநாட்டில் சிறையில் வாடும் மனைவி

Police spokesman Switzerland Crime
By Balamanuvelan May 25, 2023 06:55 AM GMT
Report

இணையத்தில் கிடைக்கும் சலுகைகள் மீது நாட்டம் கொண்ட சுவிஸ் நாட்டவர் ஒருவரால், அவரது மனைவி வெளிநாடொன்றில் சிறையில் வாடுகிறார்.

இலவச ஆசை காட்டிய இணையம்

எலிசபெத்தும் பீற்றரும் (Elisabeth and Peter Baumgartner) சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த ஓய்வு பெற்ற தம்பதியர். பீற்றருக்கு எப்போதுமே இணையத்தில் சலுகை விலையில் கிடைக்கும் பொருட்கள் மீது ஒரு ஆர்வம். ஆனால், அவரது இலவச ஆசை அவரது மனைவியை சிறைக்கு அனுப்பிவிட்டது.

2021ஆம் ஆண்டு, பீற்றருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் அவருக்கு பல மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் சொத்து கிடைக்க இருப்பதாகவும், கொலம்பியாவுக்கு இலவச பயணம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலவசத்துக்கு ஆசைப்பட்ட சுவிஸ் நாட்டவரால் வெளிநாட்டில் சிறையில் வாடும் மனைவி | Swiss National Wife In Prison

RTS

பயணச்சீட்டுகள் முதல் தங்குமிடம் வரை அனைத்தும் இலவசம் என கூறப்பட, இலவச சுற்றுலா என்றதும், கண்ணை மூடிக்கொண்டு புறப்படத் தயாராகிவிட்டார் பீற்றர்.

ஆனால், எலிசபெத்துக்கோ சந்தேகம். ஆனாலும், அடம்பிடித்து மனைவியையும் சம்மதிக்கவைத்து தன்னுடன் புறப்படவைத்துவிட்டா

சிறைக்கு அனுப்பிய இலவச ஆசை

இலவசமாக கொலம்பிய சுற்றுப்பயணம் சென்ற நிலையில், பீற்றர் தனது சொத்துக்களைப் பெறுவதில் ஒரு சிறு பிரச்சினை என்று கூறிய சுற்றுலா ஏஜண்ட், அவர்கள் ஐரோப்பாவுக்கு திரும்பிச் செல்லவேண்டுமென கூறியிருக்கிறார்.

அதன்படி தம்பதியர் புறப்பட, அந்த ஏஜண்ட் பரிசுப்பொருள் ஒன்றைக் கொடுத்து, அதை தன் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிடுமாறு கூற, அதை எலிசபெத்தின் சூட்கேசில் வைத்திருக்கிறார்கள்.

இலவசத்துக்கு ஆசைப்பட்ட சுவிஸ் நாட்டவரால் வெளிநாட்டில் சிறையில் வாடும் மனைவி | Swiss National Wife In Prison

RTS

தம்பதியர் விமானம் ஏறி, விமானம் புறப்படுவதற்கு சற்று முன், பணிப்பெண் வந்து எலிசபெத்தை கொஞ்சம் வரமுடியுமா என அழைத்துச் சென்றுள்ளார்.

விமானத்திலிருந்து இறங்கிய எலிசபெத்தை பொலிசார் கைது செய்துள்ளார்கள். காரணம், அவரிடம் அந்த ஏஜண்ட் கொடுத்த பரிசுப்பொருளுக்குள் மூன்று கிலோ போதைபொருள் இருந்திருக்கிறது.

மொழி தெரியாத இடத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் எலிசபெத்.

இலவசத்துக்கு ஆசைப்பட்ட சுவிஸ் நாட்டவரால் வெளிநாட்டில் சிறையில் வாடும் மனைவி | Swiss National Wife In Prison

RTS

சுவிஸ் அரசின் தலையீட்டால் எலிசபெத் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், மார்ச் மாதம் வழக்கு விசாரணை துவங்க, அவருக்கு ஐந்து ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், 140,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த தண்டனைக்காலத்தையும் வீட்டுச்சிறையில் கழிக்க அனுமதி கிடைக்குமா அல்லது சிறை செல்லவேண்டுமா என்பது தெரியாமல் காத்திருக்கிறார் அவர்.

அவர் தன் கணவருடன் தற்போது தொடர்பிலில்லை. காரணம், அவரால்தான், தான் இந்த நிலையிலிருப்பதாக அவர் முழுமையாக நம்புகிறார். 

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US