கோவிட் நேரத்தில் மரண பயத்தில் சுவிஸ் நாட்டவர்கள் பலர் எடுத்த முடிவு
கோவிட் காலகட்டத்தில் மரண பயத்துக்கு ஆளாகியுள்ளார்கள் சுவிஸ் நாட்டவர்கள் பலர்.
ஆகவே, இறந்துபோய்விடுமோம் என்ற பயத்தில் அவர்களில் பலர் ஒரு குறிப்பிட்ட விடயத்தைச் செய்துள்ளார்கள்.
கோவிட் காலகட்டத்தில் மரணமடையக்கூடும் என்ற பயம் உருவானதால், சுவிஸ் நாட்டவர்கள் பலர் தங்கள் சொத்துக்கள் குறித்து உயில் எழுதிவைத்துள்ளார்கள்.
கோவிட் காலகட்டத்துக்கு முன் உயில் எழுதியவர்களின் எண்ணிக்கை 27 சதவிகிதமாக இருந்தது, 2019இல், 32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இவ்வளவு பேர் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணம், உறவினர்களின் பாதுகாப்பு மற்றும், தங்கள் மரணத்துக்குப் பிறகு வாரிசுகளுக்கிடையே சண்டை வருவதை தவிர்ப்பதுமாகும்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. கூடவே மற்றொரு முக்கிய மாற்றத்தையும் கோவிட் காலகட்டம் உருவாக்கியுள்ளது.
அதாவது, ஆண்டுதோறும் வாரிசுகளுக்கு கிடைக்கும் பரம்பரை சொத்து சுமார் 95 பில்லியன்களாக இருக்கும் நிலையில், அப்படி பரம்பரை சொத்துக்களை பெற்றவர்கள், அதில் 0.3 சதவிகிதத்தை மட்டுமே தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
ஆனால், 2020இலோ, அதாவது கோவிட் தொற்று பரவலின்போதோ, 11 சதவிகிதத்தினர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளனர். அதுவே, 2022இல் 14 சதவிகிதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.