காசாவிலிருக்கும் சுவிஸ் நாட்டவர்கள்: சிலர் எடுத்துள்ள முடிவு
இஸ்ரேல் காசா போர் தொடரும் நிலையில், காசாவிலிருக்கும் வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த பாலஸ்தீனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
காசாவுக்கும் எகிப்துக்கும் இடையிலிருக்கும் ரஃபா என்னும் பகுதி வழியாக அவர்கள் எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். பல்வேறு நாடுகள், எகிப்திலிருக்கும் தங்கள் குடிமக்களை தத்தம் நாடுகளுக்கு அழைத்துவருகின்றன.
காசாவிலிருக்கும் சுவிஸ் நாட்டவர்கள்
இந்நிலையில், காசாவிலிருந்து சுவிஸ் நாட்டவர்கள் ஏழு பேர் காசாவிலிருந்து வெளியேறி எகிப்தை வந்தடைந்துள்ளார்கள். அவர்களில் ஆறு பேர் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்.
அவர்கள் கெய்ரோவிலிருக்கும் சுவிஸ் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அதிகாரிகள் அவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.
சிலர் எடுத்துள்ள முடிவு
சுவிஸ் குடிமக்களில் மேலும் ஒருவர், அவர் பாலஸ்தீனிய மற்றும் சுவிஸ் இரட்டைக் குடியுரிமை கொண்டவர், காசாவிலிருந்து வெளியேறுவதற்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்ட நான்கு பேர், இப்போதைக்கு காசாவிலேயே இருப்பது என முடிவு செய்துள்ளதாக, சுவிஸ் பெடரல் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
வேறு சில நாட்டின் குடிமக்களும், இதேபோல காசாவிலேயே இருப்பது என முடிவு செய்துள்ளார்கள். இவ்வளவு காலமாக காசாவில்தான் வாழ்ந்தோம், இனியும் காசாவில்தான் வாழ்வோம், போர் விரைவில் முடிவுக்கு வரும் என நாங்கள் நம்புகிறோம் என அவர்களில் சிலர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |