சுவிட்சர்லாந்தையும் வம்புக்கிழுக்கும் ரஷ்யா: சுவிட்சர்லாந்தின் பதில்
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல நாடுகள் மீது விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது ரஷ்ய தரப்பு. பிரித்தானியா முதல் பல மேற்கத்திய நாடுகளுக்கு புடின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில், மாஸ்கோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர். அந்த விடயம் பிரான்சுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, சுவிட்சர்லாந்து மீதும் விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளது ரஷ்யா.
சுவிட்சர்லாந்து மீது ரஷ்யா விமர்சனம்
ஜூன் மாதம், 15 மற்றும் 16ஆம் திகதிகளில், சுவிட்சர்லாந்திலுள்ள Bürgenstock என்னுமிடத்தில் உக்ரைன் அமைதி உச்சி மாநாடு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், அந்த உச்சி மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள புடின், அந்த மாநாட்டிற்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும், மாஸ்கோ இல்லாமல் எதையும் முடிவு செய்ய முடியாது என்றும், மாநாட்டில் ரஷ்ய தூதுக்குழு இருக்காது என்பதால், ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது என்ற கருத்து உருவாகலாம் என்றும் புடின் கூறியுள்ளார்.
AP
சுவிட்சர்லாந்தின் பதில்
ஆனால், புடினுடைய விமர்சனத்திற்கு சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் பதில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், வெளிநாட்டு தலைவர்களின் கருத்துக்கள் குறித்து தாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |