நாட்டு மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி அளித்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து
தன் நாட்டு மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி அளித்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இடம் பிடித்துள்ளது. சென்ற வாரத்தில், சுவிட்சர்லாந்தில் 80,000 பேர் தடுப்பூசியின் ஒரு டோஸை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
இப்போதைக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் மட்டுமே இதே வேகத்தில் தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்கி வருகின்றன.
தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதன் வேகம் தடைபடுவதற்கு, தடுப்பு மருந்து வந்து சேருவதில் உள்ள தாமதமும் காரணமாகிறது. ஆரம்பத்தில், சுவிட்சர்லாந்தும் கொஞ்சம் தடுமாறியது.
ஒழுங்கு முறை அமைப்புகள் தடுப்பூசிகளை அங்கீகரிக்க தாமதித்ததும், மாகாணங்கள் பலவற்றில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஒழுங்கு படுத்துவதில் பிரச்சினைகள் இருந்ததும்தான் அதற்கு காரணம். அத்துடன், முதல் டோஸ் தடுப்பூசி போட்டு விட்டு, 4 வாரங்களில் இரண்டாவது டோஸ் கொடுப்பதற்கு போதுமான மருந்து வேண்டும் என்பதற்காக, தடுப்பு மருந்தை சேமித்து வைக்கும் கொள்கையும் தடுப்பூசி திட்டத்தை தாமதப்படுத்திற்று.
ஆனால், தற்போது போதுமான தடுப்பு மருந்து கிடைப்பதால், மாகாணங்கள் அதிகம் பேருக்கு வேகமாக தடுப்பூசி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
சுவிட்சர்லாந்தில், தற்போது 20 சதவிகிதம் குடிமக்களுக்கு இரண்டு டோஸ்
தடுப்பூசியும் வழங்கப்பட்டாயிற்று.
மொத்தத்தில் 37 சதவிகிதம் பேர் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப்
பெற்றுக்கொண்டு விட்டார்கள்.
இந்நிலையில், தடுப்பூசி திட்டம் நல்ல பலன் கொடுத்துள்ளது என்று கூறியுள்ள
நிபுணர்கள், அக்டோபருக்குப் பின் முதன்முறையாக கடந்த வாரத்தில் கொரோனா
தொற்றியோரின் எண்ணிக்கை 1,000க்கு குறைந்துள்ளதாகவும், அந்த நிலை அப்படியே
தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.