முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட இந்த நாட்டவர்களுக்கு அனுமதி: சுவிட்சர்லாந்து அறிவிப்பு
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட இந்தியர்களுக்கு தன் நாட்டை திறந்து விட்ட முதல் நாடாக சுவிட்சர்லாந்து ஆகியுள்ளது.
அத்துடன், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழையும்போது அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கு பிசிஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என பயணிகள் நிரூபிக்கவேண்டியதில்லை என்றாலும், நீங்கள் பயணிக்கும் விமானத்தில் அதைக் காட்டவேண்டி இருக்கலாம்.
இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் நேரடி விமான சேவை இல்லை. ஆகவே பயணிகள் பாரீஸ் அல்லது ஆம்ஸ்டர்டாம் வழியாகவே சுவிட்சர்லாந்து செல்ல வேண்டியிருக்கும். இந்த மாற்றம் ஜூன் 26 முதல் அமுலுக்கு வருகிறது.
மேலதிக தகவல்களுக்கு...
https://timesofindia.indiatimes.com/business/india-business/switzerland-opens-doors-for-fully-vaccinated-indian-travellers/articleshow/83930721.cms