பிரசவ விடுப்பு தொடர்பில் விரைவில் சுவிஸ் பெற்றோர் சிலருக்கு நல்ல செய்தி?
ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தையின் தாயைப்போலவே அதன் தந்தைக்கும் பிரசவ விடுப்பு அளிக்கவேண்டும் என்னும் விடயம், பல நாடுகளில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
விரைவில் சுவிஸ் பெற்றோருக்கு நல்ல செய்தி?
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பல ஆண்டுகளாகவே பெற்றோர் இருவருக்கும் பிரசவ விடுப்பு அளிப்பது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருகின்றன.

சில தனியார் நிறுவனங்கள் மட்டும், குழந்தையின் தந்தைக்கும் தாய்க்கும் சமமாக பிரசவ விடுப்பு அளிக்க இருப்பதாக அறிவித்தும் உள்ளன.
இந்நிலையில், ஜெனீவாவில் வாழும் பெற்றோருக்கு இந்த பிரசவ விடுப்பு விரைவில் சாத்தியமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ஜெனீவாவில் வாழும் இளம் பெற்றோரில், குழந்தை பெற்ற தாய்க்கு 16 வாரங்களும், தந்தைக்கு 8 வாரங்களும் பிரசவ விடுப்பு அளிக்க திட்டமிடப்பட்டுவருகிறது.
இந்த திட்டம், 2027ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |