சுவிட்சர்லாந்தில் வலதுசாரிக் கட்சிக்கு அமோக வெற்றி... புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி
புலம்பெயர்ந்தோர் அச்சப்பட்டதுபோலவே, சுவிட்சர்லாந்தில் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
புலம்பெயர்தலுக்கெதிரான பிரச்சாரத்தை முன்வைத்த கட்சிகள்
சுவிட்சர்லாந்தின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, புலம்பெயர்தலுக்கெதிரான கொள்கை கொண்ட கட்சியாகும். புகலிட சட்டங்களை கடுமையாக்குவதும், புலம்பெயர்தலைக் குறைப்பதும்தான் அதன் புலம்பெயர்தல் கொள்கைகள்.
புலம்பெயர்தல் குறித்து தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் அக்கட்சி, வெளிநாட்டவர்கள், காப்பீடு மற்றும் பிற சமூக உதவிகள் பெறுவதன் மூலம், சுவிஸ் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாக கருதுகிறது.
BusinessLIVE
இந்நிலையில், புலம்பெயர்தலுக்கெதிரான கருத்துக்களையே தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிரதானமாக முன்வைத்தது சுவிஸ் மக்கள் கட்சி. அக்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Christian Imark, தேர்தலில் தங்கள் கட்சி வாக்குகளை அள்ளும் என்று கூறியிருந்தார்.
புலம்பெயர்தல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றலுக்கான கட்டண அதிகரிப்பு ஆகியவையே தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்துக்கள் என வெளிப்படையாகவே கூறியிருந்தார் அவர். புலம்பெயர்தல் சுவிட்சர்லாந்துக்கு பெரிய தொல்லை என்று கூறிய Imark, புலம்பெயர்ந்தோருக்காக உள்கட்டமைப்புகளையும் வீடுகளையும் அதிகரிக்கவேண்டியுள்ளது என்றும் கூறியிருந்தார்.
Mobimag - Mobilität in der Schweiz
புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி
இந்நிலையில், புலம்பெயர்ந்தோர் அஞ்சியதுபோலவே, சுவிஸ் மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், நாட்டை ஆளும் பெடரல் கவுன்சிலின் ஏழு உறுப்பினர்களில் இரண்டு பேர் மட்டுமே சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அக்கட்சியின் வெற்றி பெரிய மாற்றம் அதையும் ஏற்படுத்திவிடமுடியாது என ஒருபக்கம் கூறப்பட்டாலும், வலதுசாரியினருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
Swissinfo
ஏனென்றால், சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முக்கிய முடிவுகளை எடுப்பது, மக்களும் அவர்கள் பங்கேற்கும் வாக்கெடுப்புகளும்தான்.
இதற்கிடையில், ஆளும் பெடரல் கவுன்சிலிலும் மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புவதாக இன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மொத்தத்தில், சுவிஸ் தேர்தல் முடிவுகள், எதிர்பார்த்ததுபோலவே, புலம்பெயர்தலுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |