சுவிட்சர்லாந்தில் புதிய நடவடிக்கைகள் அமுல்படுத்த திட்டம்!
சுவிட்சர்லாந்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நடவடிக்கைகளை அமுல்படுத்த அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது.
சுவிட்சர்லாந்தில் புதிதாக பரவிவரும் Omicron வகை கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக, உட்புற உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களை மூடுவது மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்குவது உட்பட புதிய நடவடிக்கைகளை கொண்டுவர அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது.
தகவல்களின்படி, அரசாங்கம் இரண்டு வழிகளைப் பற்றி விவாதிக்கபடுவதாக தெரியவந்துள்ளது.
ஒன்று, உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மற்றும் பிற பொது உட்புற இடங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்லது பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படும். மேலும், டிஸ்கோக்கள் மற்றும் பார்களுக்கு கூடுதலாக எதிர்மறை சோதனை முடிவையும் காட்டப்பட வேண்டும்.
மற்றோன்று, பகுதி ஊரடங்கை (Partial Lockdown) அமுல்படுத்துவது. அதாவது உட்புற உணவகங்கள், ஜிம்கள் மற்றும் டிஸ்கோக்களை மூடுவது. இதற்கிடையில், ஒரு பரந்த ஊரடங்கை விதிக்கவும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 8.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாநதில், கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 70,000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், விவாதத்தில் உள்ள இந்த இரண்டு விருப்பங்களுடன் கூடுதலாக சில நடவடிக்கைகள் கடுமையாக்கபடலாம் என கூறப்படுகிறது.
சாத்தியமான கூடுதல் நடவடிக்கைகள்:
- கட்டாய Work From Home அல்லது Home-office கொண்டுவரப்படலாம்
- தனிப்பட்ட கூட்டங்களில் மக்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தபடலாம்
- பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படலாம்
- சில கோவிட் பரிசோதனைகளுக்கான செலவுகளை மீண்டும் அரசாங்கமே ஏற்கலாம்
-
சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பனிச்சறுக்கு பகுதிகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்