சுவிஸ் பாஸ்போர்ட் கிடைப்பதை எளிதாக்கவேண்டும்: புதிய பிரேரணை
சுவிஸ் பாஸ்போர்ட் கிடைப்பதை எளிதாக்கவேண்டும் என்று கோரும் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க முடியாத நிலையில் 2 மில்லியன் பேர்
சுவிட்சர்லாந்தில், வாக்களிக்க முடியாத நிலையில் 2 மில்லியன் பேர் வாழ்வதாகக் கூறும் Aktion VierVierTel என்னும் அமைப்பு, சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு வாக்களிக்க உரிமை அளிக்கவேண்டும் என்று கோரி, பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களுக்குப் பிறக்கும் எந்த குழந்தைக்கானாலும் தானாகவே பாஸ்போர்ட் கிடைக்கவேண்டும் என்று கூறும் அந்த அமைப்பு, சுவிட்சர்லாந்தில் 5 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்கள், தேசிய மொழி குறித்து அடிப்படை அறிவு கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கும் பாஸ்போர்ட் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் அந்த பிரேரணையில் கூறியுள்ளது.
ஆனால், குடியுரிமை பெறுவதை எளிதாக்கக் கோரி இதற்கு முன் முன்வைக்கப்பட்ட இத்தகைய பிரேரணைகள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.