இன்று மழை வருமா என்று கேட்பதற்காக அவசர உதவியை அழைக்கும் சுவிஸ் மக்கள்: பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை
சுவிஸ் மாகாணமொன்றில், அவசரம் அல்லாத விடயங்களுக்காக எல்லாம் மக்கள் அவசர உதவியை அழைப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அவசர உதவி எண்
சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில், மக்கள், இன்று மழை வருமா, போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறதா, எந்த பார்மஸி இயங்குகிறது என்பதை அறிவதற்காகவெல்லாம் அவசர உதவி எண்ணான 117ஐ அழைப்பதாக, மாகாண பொலிசார் வருத்தப்பட்டுக்கொள்கிறார்கள்.
இதனால், உண்மையான அவசர உதவி தேவைப்படுவோர் பாதிக்கப்படுவதாக பொலிசார் தெரிவிக்கிறார்கள்.
இன்னொரு பக்கமோ, தொழில்நுட்பமும் இடைஞ்சல் செய்கிறது. ஆம், ஸ்மார்ட் வாட்சுகள் சில, ஏதேனும் அதிர்ச்சி ஏற்பட்டாலே உடனே அவசர உதவியை தானாகவே அழைக்கின்றனவாம்.
ஆகவே, உண்மையாகவே அவசரம் இல்லாத எந்த விடயத்திற்காகவும் அவசர உதவி எண்ணை அழைக்கவேண்டாம் என Vaud மாகாண பொலிசார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |