சுவிட்சர்லாந்திலிருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயரும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்திலிருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த சுவிஸ் குடிமக்கள் எண்ணிக்கை 13,300.
இதனால், வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் நட்டவர்கள் எண்ணிக்கை 1.6 சதவிகிதம் அதிகரித்து 826,700 ஆகியுள்ளது.
சுவிஸ் மக்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்கள்?
சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிய சுவிஸ் குடிமக்களில் 64 சதவிகிதம் பேர், ஐரோப்பாவில் வாழ்கிறார்கள்.
அதிக அளவில் 212,100 பேர் பிரான்சிலும், 101,000 பேர் ஜேர்மனியிலும், 52,600 பேர் இத்தாலியிலும், 40,900 பேர் பிரித்தானியாவிலும், 27,300 பேர் ஸ்பெயினிலும் வாழ்வதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
இதுபோக, 296,200 சுவிஸ் குடிமக்கள் அமெரிக்கா, கரீபியன், ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் வாழ்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்த சுவிஸ் குடிமக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், மற்றொரு நாட்டின் குடியுரிமையும் வைத்துள்ளார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |