மருத்துவக் காப்பீடு தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி
2025ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்க இருக்கும் மருத்துவக் காப்பீடு
சுவிட்சர்லாந்தில் 2023ஆம் ஆண்டில் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்கள் 6.6 சதவிகிதமும், 2024ஆம் ஆண்டில் 7.8 சதவிகிதமும் அதிகரித்தன.
2025ஆம் ஆண்டில், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்கள் 7 முதல் 12 சதவிகிதம் வரை உயரக்கூடும் என நுகர்வோர் தளமான Bonus.ch தெரிவித்துள்ளது.
இந்த காப்பீட்டு பிரீமியம்கள் அதிகரிப்பின் பின்னணியில் இருப்பது மருத்துவக் கட்டணங்கள் ஆகும்.
அதாவது, மருத்துவ கட்டணங்கள் அதிகரிப்பதைப் பொருத்தே காப்பீட்டு பிரீமியம்கள் அதிகரிக்கும்.
மருத்துவக் கட்டணங்கள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்துவருவது அனைவரும் அறிந்ததே.
மருத்துவக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது எதனால்?
மருத்துவக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவதற்கு முழுமையாக கோவிட் காலகட்டத்தைக் குறை சொல்லமுடியாது என்றாலும், மருத்துவக் கட்டணங்கள் அதிகரிப்பதற்கு கோவிடும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.
அத்துடன், முன்னேறியுள்ள தொழில்நுட்பம், மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரித்துள்ளது, வெளிநோயாளிகள் சேவைகள் அதிகரிப்பு மற்றும் மருந்துகள் விலை அதிகரிப்பு ஆகிய விடயங்களும் சேர்ந்துதான் மருத்துவக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்துவர காரணமாக அமைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |