ஒரு காலத்தில் வறுமை காரணமாக சுவிஸ் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்களாம்: உங்களுக்குத் தெரியுமா?
ஒரு காலத்தில் சுவிட்சர்லாந்து வறுமையில் வாடியதாகவும், பிழைப்புக்காக மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும் வரலாறு கூறுகிறது.
நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், சுவிஸ் குடிமக்களில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமையிலிருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஒரு காலகட்டம் இருந்திருக்கத்தான் செய்கிறது.
இன்று சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று, ஆனால், எப்போதுமே அது அப்படியே இருந்திருக்கவில்லை...
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இயற்கை வளம் இல்லாத சுவிட்சர்லாந்தின் மக்கள், உயிர் வாழவே கஷ்டப்பட்டார்களாம். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டுக்குள் நுழைவது வரையில் கிராமப்புறங்களில் மக்கள் வறுமையில் வாழ்ந்திருக்கிறார்கள்.
பஞ்சம் காரணமாக கிராமப்புறங்களிலுள்ள பலர் வெளிநாடுகளுக்கு பிழைப்புத் தேடிச் சென்றிருக்கிறார்கள், குறிப்பாக, தென் மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு...
புதிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற சுவிஸ் மக்கள், அங்கு காலனிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளார்கள். பிரேசிலிலுள்ள Novo Friburgo மற்றும் அமெரிக்காவிலுள்ள New Glarus ஆகிய பகுதிகளில் அவர்கள் காலனிகளை உருவாக்கியுள்ளார்கள்.
அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்கள், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்தும், அங்கும் ஆபத்தான நிலையில்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
அதிகாரப்பூர்வ அரசு ஆவணம் ஒன்று, அப்படி கிராமங்களிலிருந்து நகரத்துக்கு வந்து, ஒரு சமுதாயத்தின் அங்கமாக மாறாதவர்கள், வீடற்றவராகவும் உணவுக்காக தெருவில் அலைந்தவர்களாகவும்தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறது.
ஆனால், அப்படி ஒரு மோசமான நிலையில் இருந்த சுவிட்சர்லாந்து எப்படி இன்று காணப்படும் பணக்கார நாடு என்னும் நிலையை அடைந்தது?
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பொருளாதாரம் வெடித்துக் கிளம்பி, அது 20ஆம் நூற்றாண்டிலுல், அதற்குப் பின்னும் தொடர்ந்த நிலை, இந்தக் கேள்விக்கான பதிலின் பின்னால் இருக்கிறது.
ஒரு தொழில்துறை நாடாக இருந்த சுவிட்சர்லாந்து, 1950களில், சேவைப் பொருளாதார நாடாக மாறியிருக்கிறது. அதாவது, செல்வந்தர்களுக்கு இரகசிய சேவையும் பாதுகாப்பும் அளிக்கத் துவங்கியதால் (அதுதான், பல நாடுகளின் செல்வந்தர்கள் தங்கள் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் குவிப்பது குறித்து இப்போது நாம் எல்லாரும் நன்கறிந்திருக்கிறோமே) பொருளாதார துறையில் செழிக்கத் துவங்கியுள்ளது சுவிட்சர்லாந்து (சில நேரங்களில் சட்ட விரோதமாகவும்).
ஆனாலும், இந்த வங்கிகள் மூலம் மட்டுமே சுவிட்சர்லாந்து முன்னேறியது என்றும் கூறிவிடமுடியாது...
காரணம், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கைக்கடிகார தயாரிப்பு, சுற்றுலா என்பது போன்ற பிற துறைகளும் வளரத் துவங்கியதைத் தொடர்ந்து சுவிஸ் பொருளாதாரம் முன்னேறத் துவங்கியுள்ளது.
அத்துடன், நேரடி ஜனநாயகம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையும், சுவிட்சர்லாந்தை ஏழை நாடு என்ற நிலையிலிருந்து செழிப்பு மிக்க ஒரு நாடாக மாற்றியதையும் மறுப்பதற்கில்லை.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022